உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  எல்லீஸ் அணைக்கட்டிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு

 எல்லீஸ் அணைக்கட்டிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு

விழுப்புரம்: விழுப்புரம் எல்லீஸ் அணைக்கட்டிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. விழுப்புரம் அருகே கப்பூர் - ஏனாதிமங்கலம் இடையே, தென்பெண்ணை ஆற்றில் இருந்த பழமையான எல்லீஸ் அணைக்கட்டு உடைந்ததால், அங்குரூ. 86 கோடி மதிப்பில், தற்போது புதிய அணைக்கட்டு கட்டப்பட்டுள்ளது. தற்போது, தொடர் மழை காரணமாக, தென்பெண்ணை ஆற்றில் நீர்வரத்துள்ளது. இந்த வெள்ள நீர் வழிந்து ஆற்றில் செல்வதால், அதனை பாசனத்திற்கு பயன்படுத்த திறந்து விடப்பட்டுள்ளது. எல்லீஸ் அணைக்கட்டின் வலது புறம் பகுதியில் பிரிந்து செல்லும், பிரதான ஆழாங்கால் வாய்க்காலின் பிரிப்பு சுவர், கடந்த மழை வெள்ளத்தின்போது உடைந்து போனது. அந்த சுவர் புதிதாக கட்டப்பட்டுள்ளது. இந்நிலையில், தற்போது ஆற்றில் வழிந்து செல்லும் வெள்ள நீர், அணைக்கட்டிலிருந்து நேற்று காலை ஆழாங்கால் பாசன வாய்க்காலில் திறந்து விடப்பட்டது. நேற்று காலை 9:00 மணிக்கு, விழுப்புரம் பொதுப்பணித்துறை அதிகாரிகள், விவசாய பிரதிநிதிகள் கலந்துகொண்டு, ஆழாங்கால் வாய்க்காலில் 150 கன அடி நீரை திறந்துவிட்டனர். இந்த நீர் பிடாகம், கண்டமானடி, கொளத்துார் வழியாக ஆழாங்கால் வாய்க்காலில் வளவனுார் ஏரிக்கு செல்கிறது. இதன் மூலம் 15 ஏரிகளுக்கு நீர் பிடிப்பு இருக் கும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











புதிய வீடியோ