உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / நம்ம பள்ளி... நம்ம வாத்தியார் பேட்டி

நம்ம பள்ளி... நம்ம வாத்தியார் பேட்டி

-தனபால்,விழுப்புரம் கம்பன் கழக தலைவர்.

அர்ப்பணிப்புடன் பணிபுரியும் ஆசிரியர்கள்

விழுப்புரம் சுற்றியுள்ள கிராமப்புற ஏழை மாணவிகளுக்கு அறிவுக்கூடமாக இப்பள்ளி விளங்குகிறது. தனியார் பள்ளிக்கு இணையாக கட்டடங்கள், ஸ்மார்ட் கிளாஸ், ஸ்மார்ட் போர்டு வகுப்புகளும், மாணவர்களின் புத்தாக்க திறன்களை வளர்க்கும் ஆய்வகம் உள்ளது. விளையாட்டில், சிலம்பம், மல்லர் கம்பம், பல்திறன் கலை போட்டிகளில் தேசிய அளவில் மாணவியர்கள் தங்கம் வென்றுள்ளனர். தற்போது, சேலம் கலெக்டராக உள்ள பிருந்தாதேவி இப்பள்ளியின் முன்னாள் மாணவி. இப்பள்ளி தலைமை ஆசிரியர் சசிகலாவின் சீறிய தலைமையில், ஆசிரியர்கள் அர்ப்பணிப்புடன் பணியாற்றுகின்றனர்.-தமிழ்ச்செல்வி பிரபு,விழுப்புரம் நகரமன்ற தலைவர்.

விழுப்புரத்தின் அடையாளம்

விழுப்புரத்தின் அடையாளமாக இப்பள்ளி திகழ்கிறது. ஏராளமான மாணவிகள் இங்கு படித்து, கலெக்டர், டாக்டர்கள், பொறியாளர்கள் என உயர் பதவிகளில் உள்ளனர். இங்கு ஆங்கில வழியில் எல்.கே.ஜி., முதல் பிளஸ் 2 வரையும் பயிற்றுவிக்கின்றனர். அரசு பள்ளிக்கு ஒரு எடுத்துக்காட்டாக ஆண்டு தோறும் சாதித்து வருகிறது. ஆசிரியர்கள் தீவிர கண்காணிப்புடன் சிறப்பாக மாணவியர்களை வழிநடத்துவதால், தலைசிறந்த பள்ளியாக விளங்குகிறது. பல்வேறு கலை திறன் போட்டிகள் நடத்தப்படுவதால், பல துறைகளில் மாணவியர்கள் சாதிக்கின்றனர்.-சசிகலா,பள்ளி தலைமை ஆசிரியர்.

நானும் இதே பள்ளி மாணவி

ஏராளமான கிராமப்புற மாணவிகள் பயில்கின்றனர். முதன்மைக் கல்வி அலுவலர் அறிவழகன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பழனிவேல், பள்ளி மேலாண்மை குழு தலைவர் பானு மற்றும் ஆசிரியர்கள் ஒருங்கிணைப்புடன் சிறப்பாக வழிநடத்தி செல்கிறோம். மாணவிகளின் உயர் படிப்புகளுக்கான நீட் - ஜெ.இ.இ., போன்ற சிறப்பு பயிற்சி வகுப்புகளும் நடத்தப்படுகிறது. கலெக்டர் பிருந்தாதேவி, டாக்டர் சித்ரா என பல சாதனையாளர்களை இப்பள்ளி உருவாக்கியுள்ளது. நானும் இப்பள்ளியில் படித்தேன். என்னை போல், ஏராமான ஆசிரியர்களையும் உருவாக்கியுள்ளது. -பழனிவேல்,பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர்.

அனைத்து பள்ளிக்கும் முன்னுதாரணம்

விழுப்புரத்திற்கு பெருமை சேர்க்கும் பழமையான பள்ளியின் தலைமை ஆசிரியர் சசிகலா மற்றும் ஆசிரியர்கள் குழுவினர், மிகுந்த கவனிப்போடு செயல்படுவது தனித்துவமாக உள்ளது. மாணவிகள் பள்ளிக்கு வந்து அவர்கள் வெளியே செல்லும் வரை கவனிப்பும். தவறு செய்தால், கண்டிப்பும் சிறந்த நிர்வாகம். கல்வி போதிப்பது, சுற்றுசூழலை பராமரிப்பது என, அனைத்து பள்ளிக்கும் முன்னுதாரணமாக உள்ளது. அரசு சார்பில், பல்வேறு கட்டடங்கள், உள் கட்டமை ப்பு வசதிகள் சிறப்பாக செய்து கொடுத்துள்ளதும் வரவேற்க கூடியதாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி