| ADDED : ஜன 23, 2024 05:20 AM
அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிசாமி, கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்க தான் வரும்போது, நிர்வாகிகள் பூங்கொத்து வழங்க வேண்டாம், கருத்தாழமிக்க புத்தகங்களை வழங்க வேண்டும் என சமீபத்தில் தெரிவித்திருந்தார்.இந்நிலையில் கடந்த 20ம் தேதி கட்சி பிரமுகர் இல்ல திருமண வரவேற்பில் பங்கேற்க சென்னையிலிருந்து விழுப்புரம் மாவட்ட எல்லையான ஓங்கூர் டோல் கேட் அருகே வந்த பொதுச்செயலாளர் பழனிசாமிக்கு, மாஜி அமைச்சர் சண்முகம் தலைமையில் வரவேற்பு கொடுக்கப்பட்டது.இதில் வழக்கமாக பூங்கொத்து கொடுக்கும் மாஜி அமைச்சர், முதன் முறையாக அப்துல்கலாம் எழுதிய 'அக்னி சிறகுகள்' புத்தகத்தை வழங்கி வரவேற்றார்.இதேபோல், கட்சி நிர்வாகிகள் பலர் வழக்கத்திற்கு மாறாக சால்வை, பொக்கே கொடுக்காமல், பாரதியார், பாரதிதாசன் உட்பட பிரபல எழுத்தாளர்களின் புத்தகங்களை கொடுத்தனர்.