உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / செஞ்சியில் இருந்து சென்னைக்கு பஸ் வசதியின்றி மக்கள் அவதி

செஞ்சியில் இருந்து சென்னைக்கு பஸ் வசதியின்றி மக்கள் அவதி

செஞ்சி: செஞ்சியில் இருந்து சென்னைக்கு செல்ல பஸ் இன்றி பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். செஞ்சியைச் சுற்றி 300க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் இருந்து அரசு வேலை, வியாபாரம் என பல்வேறு காரணங்களுக்காக ஆயிரக்கணக்கான குடும்பங்கள் சென்னைக்கு குடியேறியுள்ளனர். இதே போல் சென்னையில் உள்ள பள்ளி, கல்லுாரிகளில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் படிக்கின்றனர். சென்னையில் தங்கி தனியார் மற்றும் அரசு நிறுவனங்களிலும் ஏராளமானோர் பணிபுரிவதால் சென்னையில் தங்கியுள்ளனர். இவர்கள் அனைவரும் தீபாவளி, பொங்கல் போன்ற முக்கிய விழா நாட்களில் சொந்த ஊருக்கு வருகின்றனர். நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்த பெரும்பாலானோர் வந்து செல்வதற்கு அரசு பஸ்சையே நம்பியுள்ளனர். கடந்த வாரம் வெவ்வேறு நாட்களில் தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊருக்கு வந்தவர்களில் பெரும் பகுதியினர் நேற்று மீண்டும் சென்னைக்கு திரும்பினர். இதனால் நேற்று காலை முதல் செஞ்சியில் இருந்து சென்னைக்கு செல்லும் பயணிகள் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. திருவண்ணாமலையில் இருந்து வந்த அனைத்து பஸ்களும் ஏற்கனவே நிரம்பி வழிந்ததால் செஞ்சியில் கூடுதல் பயணிகளை ஏற்ற முடியாமல் சென்றனர். இதனால் செஞ்சி பணிமனையில் இருந்து மணிக்கு 4 பஸ்கள் என வழக்கத்தை விட கூடுதல் பஸ்களை இயக்கினர். கூடுதலாக 2 தனியார் பஸ்களும் இயக்கப்பட்டது. நேற்று அமாவாசை என்பதால் மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலுக்கு சிறப்பு பஸ்களை இயக்கியதால் செஞ்சியில் இருந்து சென்னைக்கு மேலும் கூடுதலாக பஸ்களை இயக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் குழந்தைகளுடன் சென்னைக்கு செல்ல காத்திருந்த ஏராளமானோர் பஸ் இன்றி கடும் அவதிக்குள்ளாகினர். மாற்று ஏற்பாடுகள் தேவை இந்த முறை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருவண்ணாமலையில் உள்ள தனியார் ஸ்பேர் பஸ்கள், டூரிஸ்ட் பஸ்கள், ஆம்னி பஸ்களை போக்குவரத்து துறை அதிகாரிகள் நேரடி கண்காணிப்பில் சென்னைக்கு இயக்கினர். திரும்பிச் செல்ல நேற்றும் இதே போல் தனியார் பஸ்களை சிறப்பு பஸ்களாக இயக்கினர். இதனால் திருவண்ணாமலை பயணிகள் சிரமமின்றி சென்றனர். செஞ்சியில் அதிகாரிகள் எவ்வளவு முயற்சி எடுத்தாலும் ஒரு கட்டத்திற்கு மேல் அரசு பஸ்கள் இருப்பதில்லை. எவ்வளவு பயணிகள் காத்திருந்தாலும் அதிகாரிகளால் ஒன்றும் செய்ய முடிவதில்லை. இதை சமாளிக்க முன்பதிவு முறையை அறிமுகம் செய்து தேவைக்கு ஏற்ப திருவண்ணாமலையில் செயல்படுத்தியதை போல் தனியார் பஸ்களை அரசு போக்குவரத்துக் கழகம் வாடகைக்கு எடுத்து பயணி களை அனுப்பி வைக்க நட வடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை