மேலும் செய்திகள்
மம்சாபுரம் - டி.கான்சாபுரம் தரைப்பாலம் சேதம்
23-Mar-2025
திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணெய்நல்லுார் அருகே தரைப்பாலம் அமைக்கக்கோரி கிராம மக்கள் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.திருவெண்ணெய்நல்லுார் அடுத்த அரசூர் பாரதி நகர் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது. அப்பகுதியில் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.தற்போது பாரதி நகர் - அரசூர் கூட்ரோடு பகுதி வரை நெடுஞ்சாலைத் துறை சார்பில் மேம்பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதனால், அப்பகுதி மக்கள் சாலையை கடக்கும்போது விபத்து ஏற்படுவது தொடர் கதையாக இருந்து வருகிறது.இதனைத் தவிர்க்க பாரதி நகர் பஸ் நிறுத்தம் பகுதியில் தரைப்பாலம் அமைத்து தர வேண்டுமென அப்பகுதி மக்கள் நெடுஞ்சாலைத் துறைக்கு கோரிக்கை விடுத்தனர்.அதிகாரிகள் தரைப்பாலம் அமைத்து தருவதாக தெரிவித்திருந்த நிலையில், அதன் பிறகு அதனை கண்டு கொள்ளவில்லை.இதனால், ஆத்திரமடைந்த பாரதி நகர் பகுதி மக்கள் வரும் 23ம் தேதி நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளை கண்டித்து அரசூர் கூட்ரோடு பகுதியில் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும், அதற்கான அனுமதி வழங்குமாறும் திருவெண்ணெய்நல்லுார் காவல் நிலையத்தில் நேற்று காலை 100க்கும் மேற்பட்டோர் அரசூர் ஊராட்சி தலைவர் ரவிச்சந்திரன் தலைமையில் மனு அளித்தனர். இதனால், அங்கு பரபரப்பு நிலவியது.
23-Mar-2025