உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / போன் நேரு பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் நுாறு சதவீத தேர்ச்சி

போன் நேரு பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் நுாறு சதவீத தேர்ச்சி

திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணெய்நல்லுார் போன் நேரு மேல்நிலைப்பள்ளி, 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் நுாறு சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது. திருவெண்ணெய்நல்லுார் போன் நேரு மேல்நிலைப்பள்ளியில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்று, பள்ளி நுாறு சதவீத தேர்ச்சி அடைந்துள்ளது. இப்பள்ளி மாணவன் மதுபாலா அறிவியல் பாடத்தில் நுாற்றுக்கு நுாறு மதிப்பெண்களுடன், 500க்கு 488 மதிப்பெண் பெற்று பள்ளி அளவில் முதலிடம் பிடித்துள்ளார். கோகுல் சந்தர் 484 மதிப்பெண்களுடன், சமூக அறிவியல் பாடத்தில் நுாற்றுக்கு நுாறு மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் 2வது இடமும், மாணவி ஹேம ஸ்ரீ 475 மதிப்பெண்கள் 3ம் இடம் பிடித்துள்ளார்.485 க்கு மேல் 2 மாணவர்களும், 470 க்கு மேல் 4 மாணவர்களும், 450க்கு மேல் 4 மாணவர்களும், 400க்கு மேல் 13 மாணவர்களும், 350 க்கு மேல் 6 மாணவர்கள், 300 மதிப்பெண்களுக்கு மேல் 2 மாணவர்களும் பெற்றுள்ளனர். சிறப்பிடங்களை பிடித்த மாணவர்களுக்கு பள்ளி தாளாளர் வாசுதேவன், நிர்வாக இயக்குனர் விஜயசாந்தி வாசுதேவன் ஆகியோர் சால்வை அணிவித்து இனிப்புகள் வழங்கி பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ