உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கண்டக்டரை தாக்கிய பிளஸ் 2 மாணவர் கைது

கண்டக்டரை தாக்கிய பிளஸ் 2 மாணவர் கைது

விழுப்புரம் : விழுப்புரத்தில் அரசு பஸ் கண்டக்டரைத் தாக்கிய பிளஸ் 2 மாணவரை போலீசார் கைது செய்தனர்.விக்கிரவாண்டி அடுத்த கக்கனுாரைச் சேர்ந்தவர் ராபர்ட், 45; அரசு பஸ் கண்டக்டர். இவர், நேற்று முன்தினம் விழுப்புரத்தில் இருந்து புதுக்கருவாட்சி செல்லும் அரசு டவுன் பஸ்சில் பணியில் இருந்தார். விழுப்புரம் பழைய பஸ் நிலையத்தில் இருந்து பஸ் புறப்பட்டபோது, விழுப்புரம் பகுதியைச் சேர்ந்த பிளஸ் 2 படிக்கும் 17 வயது மாணவர், பஸ்சின் முன்புற படிக்கட்டில் நின்றுகொண்டிருந்தார்.ராபர்ட், அவரை பஸ்சின் உள்ளே வருமாறு கூறினார். அதற்கு எதிர்த்து பேசிய அந்த மாணவர், ராபர்ட்டை தாக்கி மிரட்டல் விடுத்தார்.இதுகுறித்து ராபர்ட், அளித்த புகாரின் பேரில், மாணவர் மீது விழுப்புரம் மேற்கு போலீசார் வழக்குப் பதிந்து அவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி