உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  பிளஸ் 2 மாணவி தற்கொலை ஆரோவில் போலீஸ் விசாரணை

 பிளஸ் 2 மாணவி தற்கொலை ஆரோவில் போலீஸ் விசாரணை

வானுார்: ஆரோவில் அருகே ரெயின்கோர்ட் அணிவதில் தங்கையுடன் ஏற்பட்ட பிரச்னையில் பிளஸ் 2 மாணவி துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். திருச்சிற்றம்பலம் அடுத்த பட்டானுார் வி.மணவெளி பகுதியை சேர்ந்தவர் முருகன் மகள்கள் நந்தினி, 17; இவர் புதுச்சேரி கதிர்காமம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். இவரது தங்கை காவேரி. அதே பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 17 ம் தேதி இருவரும் பள்ளியை முடித்து விட்டு வீட்டிற்கு சென்றனர். அங்கு ரெயின்கோட் அணிவதில் இருவருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதற்கு நந்தினி தான் காரணம் எனக்கூறி அவரது தாய் கண்டித்துள்ளார்.இதனால் மன வேதனையில் இருந்த நந்தினி வீட்டில் துாக்கில் தொங்கியுள்ளார். அதனை பார்த்த தாய், தந்தை இருவரும் நந்தினியை மீட்டு, சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த நந்தினி நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து ஆரோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ