உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பா.ம.க., - தி.மு.க.,வினருக்கு அழைப்பு: மாஜி அமைச்சரின் அரசியல் நாகரீகம்

பா.ம.க., - தி.மு.க.,வினருக்கு அழைப்பு: மாஜி அமைச்சரின் அரசியல் நாகரீகம்

மயிலம் தொகுதியில், அ.தி.மு.க., வேட்பாளராக முன்னாள் அமைச்சர் சண்முகம் களமிறங்க உள்ளார். இவரது சகோதரர் மகன் திருமண விழா, கடந்த வாரம் சென்னையில் நடந்தது. தீபாவளிக்கு முன்னதாக, மயிலம் தொகுதி அ.தி.மு.க., நிர்வாகிகள் அனைவருக்கும் திருமண அழைப்பு வழங்கப்பட்டது. இத்தொகுதியில் இருந்து 1000க்கும் மேற்பட்ட நிர்வாகிகள், திருமண வரவேற்பு விழாவில் பங்கேற்றனர். இதேபோல், மயிலம் தொகுதியில் உள்ள பா.ம.க., மற்றும் தி.மு.க., உள்ளிட்ட கட்சிகளின் முக்கிய நிர்வாகிகள் பலருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. கருத்து வேறுபாடுகளைத் தாண்டி, மாற்றுக் கட்சியினரையும் திருமணத்திற்கு அழைத்த சண்முகத்தின் அணுகுமுறை, அரசியல் வட்டாரத்தில் வரவேற்பை பெற்றுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை