போராட்டத்தை நிறுத்த மாட்டேன் பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேட்டி
திண்டிவனம்: ''சமூக வலைதளத்தில் என்னை பற்றி அவதுாறாக பேச பணம் கொடுக்கிறார்கள்'' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார். திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் நேற்று அவர் நிருபர் களிடம் கூறியதாவது: புதுச்சேரி அருகே உள்ள பட்டானுாரில் வரும், வரும் 17ம் தேதி நடைபெற உள்ள பா.ம.க., சிறப்பு பொதுக்குழு கூட்டம் வரலாற்று சிறப்புமிக்கதாகவும், இதுவரை யாரும் நடத்தாத வகையிலும் நடைபெற உள்ளது. சமூக வலைதளங்களில் என்னை பற்றி கேவலமாக பேசுபவர்கள் சொல்லிவிட்டு போகட்டும். கட்சியின் கவுரவ தலைவர் ஜி.கே.மணி பற்றி, ஒரு கும்பல் திட்டமிட்டு அவதுாறு தகவல்களை பதிவிட்டு வருகிறது. அப்படி பதிவிடுபவர்களுக்கு பணம் கொடுத்து போட சொல்வதாக செய்திகள் வருகிறது. சமூக வலைதளத்தில் என் னை பற்றி அவதுாறாக பேச பணம் கொடுக்கிறார்கள் என்றால் நாம் எங்கே செல்கிறோம் என்று தோன்றுகிறது. இதனால் நான் என்னுடைய பயணத்தை நிறுத்தப் போவதில்லை. மக்களுக்காக போராட வேண்டியது நிறைய உள்ளது. தென்றல்களாக மக்களுக்கு பயன்படுவர்களாக நாங்கள் உள்ளோம். அதில் அவதுாறாக பேசுபவர்கள், பதர்களாக உள்ளவர்களுக்கு மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள். அந்த பதர்களை குப்பையில் கொண்டுதான் போட வேண்டும். வழக்கறிஞர் பாலு போன்றவர்களுக்கு பதில் அளிக் க எனக்கு விருப்பமில்லை. பொய் பொய்யாக பேசுபவர்களுக்கு பதில் கூறுவது என்னுடைய தரத்திற்கு ஏற்றது இல்லை. பா.ம.க., சிறப்பு பொதுக்குழு கூட்டம் திருப்பு முனையை ஏற்படுத்தும். இவ்வாறு அவர் கூறினார்.