உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / விழுப்புரத்தில் காவலர் தினம் டி.ஐ.ஜி., தலைமையில் விழா

விழுப்புரத்தில் காவலர் தினம் டி.ஐ.ஜி., தலைமையில் விழா

விழுப்புரம்:விழுப்புரத்தில் காவலர் தினத்தையொட்டி, காவலர் நினைவு துாணிற்கு மரியாதை செலுத்தி, சிறந்த காவலர்களுக்கு நற்சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. விழுப்புரம் மாவட்ட காவல்துறை சார்பில், காகுப்பம் ஆயுதப்படை வளாகத்தில் காவலர் தின விழா நேற்று காலை நடந்தது. அங்குள்ள காவலர் நினைவு துாணிற்கு விழுப்புரம் சரக டி.ஐ.ஜி., உமா, எஸ்.பி., சரவணன், ஏ.டி.எஸ்.பி.,க்கள் தினகரன், இளமுருகன், ஏ.எஸ்.பி.,ரவீந்திரகுமார்குப்தா ஆகியோர் மலர் துாவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து, டி.ஐ.ஜி., மற்றும் எஸ்.பி., தலைமையில், காவலர் தின உறுதிமொழி ஏற்றனர். தொடர்ந்து நடந்த விழாவிற்கு எஸ்.பி., சரவணன் தலைமை வகித்தார். டி.ஐ.ஜி., உமா சிறப்புரையாற்றினார். பள்ளி மாணவர் தமிழ்க்குமரன், காவலர் தின சிறப்புகள் குறித்து பேசினார். இதனையடுத்து, மாவட்டம் முழுவதும் சிறப்பாக பணிபுரிந்த இன்ஸ்பெக்டர்கள், சப் இன்ஸ்பெக்டர்கள், போலீசார் என 120 பேருக்கு, நற்சான்றிதழ்களை டி.ஐ.ஜி., வழங்கி பாராட்டினார். இதில் டி.ஐ.ஜி., உமா பேசியதாவது: மாவட்டத்தில், முதன்முறையாக காவலர் தின விழா நடக்கிறது. ஒரு கட்டடத்திற்கு அடித்தளம் எவ்வளவு முக்கியமானதோ, அதேபோல் இளம் காவலர்களின் அடித்தளப்பணி பலமாகவும், உறுதியாகவும் இருக்க வேண்டும். பல்வேறு சிரமங்களுக்கிடையே நமது காவல் பணிகளை நிறைவேற்றி வருகிறோம். போலீசாரின் வலிகளை மறப்பதற்கு, இதுபோன்ற பாாரட்டு சான்றிதழ்களும், கைதட்டல்களும், வாழ்த்துக்களும் தேவைப்படுகிறது. இதன் மூலம், போலீசார் உற்சாகத்துடன் பணியாற்றுவர். காலத்திற்கு ஏற்றாற்போல், தொழில்நுட்ப வளர்ச்சியுடன், போலீசாரும் தங்களை இணைத்துக்கொண்டு, சிறப்பாக பணியாற்ற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ