உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பெண்ணிடம் பண மோசடி  போலீஸ் விசாரணை

பெண்ணிடம் பண மோசடி  போலீஸ் விசாரணை

விக்கிரவாண்டி: அரசு வேலை வாங்கி தருவதாக பெண்ணிடம் பண மோசடி செய்த விவகாரத்தில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர். விக்கிரவாண்டி வட்டம் சேஷங்கனுார் கிராமத்தை சேர்ந்தவர் நிர்மலா,51; விவசாயி. இவரது மகன் பிரபாகரன் டி.எம்.எல்.டி., படித்துள்ளார். அவருக்கு அரசு மருத்துவக் கல்லுாரியில் வேலை வாங்கித் தருவதாக கூறி விக்கிரவாண்டி அடுத்த பாப்பனப்பட்டை சேர்ந்த கிருஷ்ணன், தட்சிணாமூர்த்தி, திருகுணத்தைச் சேர்ந்த சூர்யா ஆகிய மூவரும் நிர்மலாவிடம் கூறி உள்ளனர். இந்நிலையில் மூவரும் சேர்ந்து கடந்த, 2020ம் ஆண்டு, நிர்மலாவிடம் ரூ.3.5 லட்சம் பணம் பெற்றதாகவும், ஆனால் வேலை வாங்கித்தராமல் இழுத்தடித்து வந்ததாகவும், அவர் விக்கிரவாண்டி போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை