உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கோவிலில் திருட்டு போலீஸ் விசாரணை

கோவிலில் திருட்டு போலீஸ் விசாரணை

திண்டிவனம்: திண்டிவனம் சுப்ரமணிய சுவாமி கோவிலில் திருடு போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.திண்டிவனம், ராஜாங்குளம் பகுதியில் சுப்ரமணிய சுவாமி கோவில் உள்ளது. நேற்று அதிகாலை 5:45 மணியளவில் அர்ச்சகர் நடராஜன் கோவிலுக்கு சென்று பார்த்தபோது, கோவிலின் பின் பக்கம் உள்ள இரும்பு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு பித்தளை விளக்கு, உண்டியல் பணம், மற்றும் பூஜைக்கு பயன்படுத்தும் பித்தளை, செம்பு குடம் என 75 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் திருடு போனது தெரியவந்தது.தகவலறிந்து வந்த திண்டிவனம் டவுன் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வி மற்றும் போலீசார், கைரேகை பிரிவு சப் இன்ஸ்பெக்டர் தட்சணாமூர்த்தி ஆகியோர் தடயங்களை சேகரித்தனர்.இதுகுறித்து கோவில் நிர்வாகி ஜீவரத்தினம் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை