உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / வாலிபரிடம் ரூ.3 லட்சம் மோசடி மர்ம நபருக்கு போலீஸ் வலை

வாலிபரிடம் ரூ.3 லட்சம் மோசடி மர்ம நபருக்கு போலீஸ் வலை

விழுப்புரம்: குறைந்த முதலீட்டில் அதிக லாபம் பெறலாம் எனக் கூறி வாலிபரிடம் ரூ.3 லட்சம் மோசடி செய்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.விழுப்புரம் மாவட்டம், செஞ்சியைச் சேர்ந்தவர் கேசவன் மகன் கிருஷ்ணராஜ், 37; டிரேடிங் தொழில் செய்து வருகிறார். இவரது முக நுால் பக்கத்தில் கடந்த 14ம் தேதி வந்த நோட்டிபிகேஷனை தொட்டதும், வி.ஐ.பி., ஏ5 கஸ்டமர் சர்வீஸ் குரூப் என்ற வாட்ஸ் அப் குரூப்பில் இருந்து தொடர்பு கொண்ட மர்ம நபர், ஐ.பி.ஓ., கணக்கு துவங்கி, அதில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் எனக் கூறி 'வாட்ஸ் ஆப்' மூலம் ஒரு லிங்க் அனுப்பினார்.அதில், கிருஷ்ணராஜ் தனது ஆதார், வங்கி கணக்கு விபரங்களை பதிவு செய்த பின், மொபைல் எண் மூலம் தொடர்பு கொண்ட அந்த மர்ம நபர், சில ஸ்டாக்குகளின் பெயர்களை கூறி அதில் பணத்தை முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் என கூறியனார்.அதனை நம்பிய கிருஷ்ணராஜ், தனது வங்கி கணக்குகளில் இருந்து நெட் பேங்கிங் மூலம், மர்ம நபர் அனுப்பிய வங்கி கணக்கிற்கு 3 லட்சம் ரூபாய் அனுப்பினார். அதன் பிறகு, மர்ம நபரை தொடர்பு .கொள்ள முடியவில்லை.தான் ஏமாற்றப்பட்ட விபரம் அறிந்த கிருஷ்ணராஜ், அளித்த புகாரின் பேரில் மாவட்ட சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்து, மர்ம நபரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி