உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / வேன் மோதி போலீஸ்காரர் பலி; அவலூர்பேட்டை அருகே சோகம்

வேன் மோதி போலீஸ்காரர் பலி; அவலூர்பேட்டை அருகே சோகம்

அவலுார்பேட்டை : அவலுார்பேட்டை அருகே வேன் மோதியதில் போலீஸ்காரர் இறந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.அவலுார்பேட்டை அடுத்த கோவில் புரையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் காசி மகன் சந்தோஷ்குமார், 30; திருவாரூரில் ஆயுதப்படை பிரிவில் போலீஸ்காரராக பணிபுரிந்து வந்தார். இவர், நேற்று முன்தினம் மேல்மலையனுாரிலிருந்து கிளாகுப்பத்தைச் சேர்ந்த கன்னியப்பன் மகன் முருகையன், 33; என்பவருடன் பஜாஜ் பைக்கில் சென்றார். பைக்கை சந்தோஷ்குமார் ஓட்டினார்.கோவில்புரையூர் வந்த போது, பின்னால் வந்த வேன், பைக் மீது மோதியது. இதில் பைக்கில் வந்த இருவரும் படுகாயமடைந்தனர். உடன் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அங்கு சந்தோஷ்குமார் இறந்தார். முருகையன் சிகிச்சை பெற்று வருகிறார்.புகாரின் பேரில் அவலுார்பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை