உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பாலிடெக்னிக் மாணவர் மாயம் தந்தை போலீசில் புகார்

பாலிடெக்னிக் மாணவர் மாயம் தந்தை போலீசில் புகார்

திண்டிவனம்: பாலிடெக்னிக் கல்லுாரியில் படித்து வந்த மகனை காணவில்லை என்று தந்தை போலீசில் புகார் செய்துள்ளார். திண்டிவனம் அருகே உள்ள நெய்குப்பி கிராமத்திலுள்ள மாரியம்மன் கோவில் தெருவில் வசிப்பவர் விநாயகம். இவரது மகன் நித்தீஷ்குமார், 17; இவர் நாட்டார்மங்கலத்திலுள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லுாரியில், ஐ.டி.ஐ., முதலாம் ஆண்டு படித்து வருகிறார். மாணவர் கடந்த 4ம் தேதி வழக்கம் போல கல்லுாரிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடிப்பார்த்தும் அவர் எங்கு சென்றார் என்ற விபரம் தெரியவில்லை. மாணவரின் தந்தை விநாயகம் கொடுத்துள்ள புகாரின் பேரில் வெள்ளிமேடுப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து தேடிவருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ