| ADDED : ஜன 13, 2024 04:04 AM
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில், சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு மற்றும் மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழுக்கூட்டம் நடந்தது.கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு, கலெக்டர் பழனி தலைமை தாங்கினார். மாவட்டத்தில், கடந்த மாதம் நடந்த நிகழ்வுகள் குறித்த சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் தொடர்பாக கூட்டத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.தொடர்ந்து, நாளை 14ம் தேதி முதல் 19ம் தேதி வரை, பொங்கல் பண்டிகை, அதனையொட்டி மஞ்சுவிரட்டு, ஆற்றுத்திருவிழா உள்ளிட்ட விழாக்கள் நடக்கிறது. செஞ்சி கோட்டை, அனந்தபுரம், மலைக்கோவில், ஆரோவில் கடற்கரை, அரகண்டநல்லுார் முதல் கண்டமங்கலம் வரை உள்ள தென்பெண்ணையாறு மற்றும் பிற ஆறுகளில், மக்கள் கூடுவதற்கான உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டது.மேலும், தைப்பூசத்தையொட்டி, மயிலம் முருகன் கோவிலுக்கு அதிகளவில் பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், போக்குவரத்து, பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகளை முறையாக மேற்கொள்ள துறை சார்ந்த அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டது.கூட்டத்தில் டி.ஆர்.ஓ., பரமேஸ்வரி, ஏ.டி.எஸ்.பி., ஸ்ரீதர் உள்ளிட்ட அனைத்து துறை சார்ந்த அலுவலர்கள் பங்கேற்றனர்.