| ADDED : ஜன 19, 2024 11:15 PM
செஞ்சி,- வல்லம் அடுத்த குறிஞ்சிப்பை கிராமத்தில் பொங்கல் விளையாட்டுப் போட்டி நடந்தது.பொங்கல் பண்டிகையையொட்டி சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கிரிக்கெட், கபடி, கோலம், ஓட்டப்பந்தயம், நடை பந்தயம் உள்ளிட்ட போட்டிகள் மற்றும் எருது விடும் நிகழ்ச்சி நடந்தது. போட்டிகளில் ஏராளமானோர் ஆர்வமுடன் பங்கேற்றனர்.வெற்றி பெற்ற மற்றும் பங்கேற்ற அனைவருக்கும் பரிசளிப்பு விழா நடந்தது.ஊராட்சி தலைவர் சரஸ்வதி தலைமை தாங்கினார். ரோட்டரி மாவட்ட தலைவர் குறிஞ்சிவளவன் முன்னிலை வகித்தார்.முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் மலர்விழி, துணைத் தலைவர் காசிநாதன், நடராஜன், ராஜரத்தினம், வழக்கறிஞர் தங்கராசு, லதா, செந்தமிழ்ச் செல்வி, விஜயலட்சுமி, மணிமேகலை, தரணி வேந்தன், விஜயகுமார், ராஜசேகர், பி.ஆர்.பி., மகளிர் சுய உதவி குழு, ரோட்டரி சங்கத்தினர் பங்கேற்றனர்.