உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பொன்முடிக்கு பதவி : காணை தெற்கு ஒன்றிய தி.மு.க., இனிப்பு வழங்கல்

பொன்முடிக்கு பதவி : காணை தெற்கு ஒன்றிய தி.மு.க., இனிப்பு வழங்கல்

விழுப்புரம்: பொன்முடிக்கு தி.மு.க.,வின் துணைப் பொதுச்செயலாளராக பதவி வழங்கப்பட்டதை வரவேற்று காணையில் அக்கட்சியினர் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். தி.மு.க., துணைப் பொதுச்செயலாளராக, முன்னாள் அமைச்சர் பொன்முடி நியமிக்கப்பட்டார். இதை வரவேற்று, காணை தெற்கு ஒன்றிய தி.மு.க., சார்பில் ஒன்றிய சேர்மன் கலைச்செல்வி தலைமையில், காணை கடைவீதியில் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர். அப்போது, மாவட்ட கவுன்சிலர் சிவக்குமார், ஒன்றிய பொருளாளர் மதன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி கதிரவன், வனிதா, கிளை செயலாளர்கள் கணேசன், கிருஷ்ணன், ஏழுமலை, செந்தில் குமரன், லிங்காதரன், செந்தில், புஷ்பராஜ், முனியப்பன், ஒன்றிய விளையாட்டு மேம்பாட்டு அணி கலைமணி, மகளிரணி ரெஜினா, மஞ்சு, மங்கையர்கரசி, சுபாஷினி, நிர்வாகிகள் குமார், சரவணன், செந்தில், காணிக்கை ராஜா, ராஜி, குணசீலன், ராஜசேகர், ராஜா, சிவக்குமார் கலந்து கொண் டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை