விழுப்புரம் : விழுப்புரம் அருகே பூவரசன்குப்பம் - சென்னை வரை புதிய வழித்தடத்தில் அரசு பஸ்சை லட்சுமணன் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.விழுப்புரம் அடுத்த பூவரசன்குப்பம் பகுதியில் லட்சுமி நரசிம்மர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சென்னை உட்பட பல பகுதிகளில் இருந்து பக்தர்கள் பலர் வருகின்றனர். இதையொட்டி, பக்தர்கள், பொதுமக்கள் பூவரசன்குப்பத்தில் இருந்து சென்னை வரை பஸ் இயக்க வேண்டுமென, லட்சுமணன் எம்.எல்.ஏ.,விடம் கோரிக்கை வைத்தனர்.இதையடுத்து, நேற்று பூவரசன்குப்பம் லட்சுமி நரசிம்மர் கோவிலில் இருந்து சிறுவந்தாடு, வளவனுார், விழுப்புரம், திண்டிவனம், மேல்மருவத்துார் வழியாக சென்னை வரை புதிய வழித்தடத்தில் செல்லும் அரசு பஸ் இயக்கிவைக்கும் நிகழ்ச்சி நடந்தது.லட்சுமணன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி, பூவரசன்குப்பம் - சென்னை வரை புதிய வழித்தடத்தில் அரசு பஸ் சேவையை கொடியசைத்து துவக்கி வைத்தார். பின், அவர், பயணிகளோடு அந்த பஸ்சை சிறிது துாரம் ஓட்டி சென்றதோடு அந்த பஸ்சில் வளவனுார் வரை பயணித்தார்.இந்த நிகழ்ச்சியில், அரசு போக்குவரத்து கழக பொது மேலாளர் அர்ஜூணன், வணிக மேலாளர் மணி, கிளை மேலாளர் விஸ்வநாதன், கண்டமங்கலம் மேற்கு ஒன்றிய தி.மு.க., செயலாளர் பிரபாகரன், வளவனுார் பேரூராட்சி செயலாளர் ஜீவா, பேரூராட்சி சேர்மன் மீனாட்சி ஜீவா, ஒன்றிய நிர்வாகிகள் கனகராஜ், சுந்தரமூர்த்தி, சக்திவேல், மணிகண்டன், அசோக்குமார், ராஜேந்திரன், ஒன்றிய கவுன்சிலர் ராஜ்குமார், ஊராட்சி தலைவர்கள் சுந்தரம், சத்தியகருணாகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.