முதுநிலை மாணவர் சேர்க்கை
திண்டிவனம் : திண்டிவனம் கோவிந்தசாமி அரசு கலைக்கல்லுாரியில் முதுநிலை பாடப்பிரிவினருக்கு பொது கலந்தாய்வு நடந்தது. அந்த கல்லுாரியில், 2025-26 ம் கல்வியாண்டிற்கான முதுநிலை (எம்.ஏ.,எம்.எஸ்.சி.,மற்றும் எம்.காம்.,) கலந்தாய்வு கடந்த, 11 ம் தேதி துவங்கியது. இதில் முதுநிலை மாணவர்களுக்கான சிறப்பு ஒதுக்கீட்டின் படி, விளையாட்டு, முன்னாள் ராணுவ வீரர்கள், மாற்றுத்திறனாளி உள்ளிட்டவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது. தொடர்ந்து நேற்று அனைத்து பாடப்பிரிவினருக்கும் பொது கலந்தாய்வு நடந்தது. கல்லுாரியின் முதல்வர் நாராயணன் முன்னிலையில் பேராசிரியர்கள் கொண்ட குழு மூலம் நடந்த சேர்க்கையில், 70 மாணவ, மாணவியர் கலந்து கொண்டு, முதுகலை வகுப்பில் சேர்ந்தனர்.