உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / சாலையில் பள்ளம் விபத்து அபாயம்

சாலையில் பள்ளம் விபத்து அபாயம்

கண்டமங்கலம்: கொத்தாம்பாக்கம் ஏரிக்கரை அருகே சாலை நடுவே உள்ள பள்ளத்தால் வாகன ஓட்டிகள் விபத்திற்குள்ளாகி வருகின்றனர். புதுச்சேரி, மதகடிப்பட்டு நான்குமுனை சந்திப்பில் இருந்து தெற்கே மடுகரை, கடலுார், பண்ருட்டி செல்லும் பிரதான சாலையில் தமிழக பகுதியான கொத்தாம்பாக்கம் ஏரிக்கரை அருகே சாலை நடுவே 1.5 மீட்டர் நீளத்திற்கு ஆபத்தான பள்ளம் உள்ளது. போக்குவரத்து நிறைந்த இந்த சாலையில் இரவு நேரங்களில் அவ்வழியே செல்லும் இரு சக்கர வாகன ஒட்டிகள் பள்ளத்தில் நிலை தடுமாறி அடிக்கடி விபத்திற்குள்ளாகி வருகின்றனர். சாலை விபத்துக்களை தடுக்க அங்குள்ள பள்ளத்தை சீரமைக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ