வானுார் அரசு கல்லுாரி மாணவிகளுக்கு பாராட்டு
வானுார் புதுச்சேரி பல்கலைக்கழக சமுதாய கல்லுாரியில் நடந்த போட்டியில், முதலிடம் பிடித்த வானுார் அரசு கலைக்கல்லுாரி மாணவிகளுக்கு பாராட்டு விழா நடந்தது.புதுச்சேரி பல்கலைக்கழக சமுதாயக் கல்லுாரியில் 'காம்பீஸ்டா-2025' என்ற தலைப்பில், பல்வேறு போட்டிகள் நடந்தன. இப்போட்டிகளில் வானுார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியைச் சேர்ந்த வணிகவியல் துறை மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.இ தில் வார்த்தை விளையாட்டுப் போட்டியில், வணிகவியல் துறையில் மூன்றாம் ஆண்டு மாணவிகள் ஜான்சிராணி, லட்சுமி ஆகியோர் முதலிடம் பிடித்தனர். அவர்களுக்கு கேடயம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளை கல்லுாரி முதல்வர் வில்லியம் பாராட்டினார்.