திண்டிவனம் : புதுமைப்பெண் திட்டதின் கீழ், விழுப்புரம் மாவட்டத்தில் 3821 கல்லுாரி மாணவ, மாணவிகள் பயன்பெறுகின்றனர் என்று அமைச்சர் மஸ்தான் பேசினார். விழுப்புரம் மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், புதுமைப்பெண் திட்டத்தில் பயனடையும் கல்லுாரி மாணவர்களுக்கு முதல்வரின் வாழ்த்து செய்தி வழங்கும் விழா நேற்று காலை, திண்டிவனம் கோவிந்தசாமி அரசு கலைக்கல்லுாரியில் நடந்தது.விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அமைச்சர் மஸ்தான் பேசும் போது, ' புதுமைப்பெண் திட்டத்தில் விழுப்புரம் மாவட்டத்திலுள்ள 73 அரசு மற்றும் தனியார் கல்லுாரிகளில் பயிலும் 3821 மாணவ, மாணவிகளுக்கு ரூ.1000 வழங்கப்படுகிறது. உதவித்தொகை பெறும் மாணவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் தனியாக வாழ்த்து மடலும் அனுப்பியுள்ளார்'' என்று பேசினார்.தொடர்ந்து முதல்வரின் வாழ்த்து மடலலை மாணவிகளிடம் வழங்கினார். தொடர்ந்து அமைச்சர் தலைமையில் தேசிய வாக்காளர் தின உறுதி மொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது. விழா மேடையில், தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, அமைச்சர் மஸ்தான் கேக் வெட்டி, மாணவ, மாணவிகளுக்கு வழங்கினார். விழாவில், மயிலம் எம்.எல்.ஏ.,சிவக்குமார், திண்டிவனம் சப்கலெக்டர் திவ்யான்ஷி நிகம், மாவட்ட சமூக நல அலுவலர் ராஜாம்பாள், கல்லுாரி முதல்வர் நாராயணன், தாசில்தார் சிவா, ஒலக்கூர் ஒன்றிய சேர்மன் சொக்கலிங்கம், நகர தி.மு.க.,செயலாளர் கண்ணன், மாவட்ட அவைத்தலைவர் டாக்டர் சேகர், கவுன்சிலர்கள் ரவிச்சந்திரன், சந்திரன், நகர துணை செயலாளர் கவுதமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முதல்வரை புகழ்ந்து பேசிய மயிலம் பா.ம.க., எம்.எல்.ஏ.,
விழாவில் பேசிய மயிலம் தொகுதி பா.ம.க., எம்.எல்.ஏ.,சிவக்குமார் ''தமிழக முதல்வர் கல்லுாரி மாணவர்கள் பயன்பெறும் வகையில் கொண்டு வந்த புதுமைப்பெண் திட்டம் சிறப்பானது. இதே போல் பஸ்களில் மகளிர்களுக்கு இலவச பஸ் பயணம், குடும்ப தலைவிக்கு மாத உதவித்தொகை வழங்குவதும் பாராட்டுக்குறியது'' என்று பேசினார்.