உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / லோக்சபா தேர்தலுக்கு முன்னோட்டம் முன்னாள் அமைச்சர் பொன்முடி தகவல்

லோக்சபா தேர்தலுக்கு முன்னோட்டம் முன்னாள் அமைச்சர் பொன்முடி தகவல்

விழுப்புரம்- 'சேலத்தில் நடக்கும் தி.மு.க., இளைஞரணி மாநில மாநாடு, வரும் லோக்சபா தேர்தலுக்கு முன்னோட்டமாக அமையும்' என துணை பொதுச் செயலாளர் பொன்முடி தெரிவித்தார்.சேலத்தில் நடைபெறும் தி.மு.க., இளைஞரணி மாநாட்டையொட்டி, சென்னையிலிருந்து சேலம் நோக்கிச் சென்ற மாநாட்டு சுடர் நேற்று பிற்பகல் 1:00 மணிக்கு, விழுப்புரம் வழியாக வந்தது.விழுப்புரம் முத்தாம்பாளையம் பைபாஸ் சந்திப்பில் தெற்கு மாவட்ட தி.மு.க., சார்பில் வரவேற்பு அளித்தனர்.மாநாட்டுச் சுடரை மாநில துணை பொதுச் செயலாளர் பொன்முடி வரவேற்றார்.அப்போது அவர் நிருபர்களிடம் கூறுகையில், 'முதல்வர் ஸ்டாலின் இளைஞரணி செயலாளராக இருந்தபோது, தி.மு.க., இளைஞரணி முதல் மாநாடு சிறப்பாக நடந்தது. தற்போது உதயநிதி இளைஞரணி செயலாளராக இருக்கும்போது 2வது இளைஞரணி மாநாடு சேலத்தில் நடைபெற உள்ளது. இந்த மாநாடு, லோக்சபா தேர்தலுக்கான முன்னோட்டமாக அமையும்' என்றார்.எம்.எல்.ஏ.,க்கள் புகழேந்தி, லட்சுமணன், மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன், பொருளாளர் ஜனகராஜ், முன்னாள் எம்.எல்.ஏ., புஷ்பராஜ், நகர செயலாளர் சக்கரை உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ