உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / லாரி மீது தனியார் பஸ் மோதல்: பக்தர்கள் 11 பேர் படுகாயம்

லாரி மீது தனியார் பஸ் மோதல்: பக்தர்கள் 11 பேர் படுகாயம்

திண்டிவனம் : திண்டிவனம் அருகே முன்னால் சென்ற லாரி மீது, தனியார் பஸ் மோதி விபத்துக்குள்ளானதில் 11 பக்தர்கள் காயமடைந்தனர்.கர்நாடகாவிலிருந்து மேல்மருவத்துார் ஆதிபராசக்தி கோவிலுக்கு 46 பக்தர்களுடன் தனியார் பஸ், நேற்று காலை சென்றது. திண்டிவனம் - சென்னை சாலையில் பாதிரி கிராமம் அருகே காலை 8:30 மணிக்கு வந்த போது, முன்னால் சென்ற லாரி மீது மோதியது. இதில் நிலை தடுமாறிய லாரி சாலையோர மரத்தின் மீது மோதியது.இந்த விபத்தில், லாரி டிரைவர் உசிலம்பட்டியைச் சேர்ந்த பாண்டியராஜன், 33; மற்றும் பஸ்சில் பயணம் செய்த பக்தர்கள் காயத்ரி, 60; மங்களா, 58; லலிதா, 57; நாகராஜ், 62; வெங்கடேஷ், 38; உட்பட 11 பேர் பலர் படுகாயமடைந்தனர். காயமடைந்த அனைவரும் திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.விபத்து குறித்து ஒலக்கூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை