20ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
விழுப்புரம்: விழுப்புரம் வேலைவாய்ப்பு மையத்தில், தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் 20ம் தேதி நடக்கிறது.கலெக்டர் பழனி செய்திக்குறிப்பு:விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மையம் வாயிலாக, படித்த இளைஞர்களுக்கு, சிறியளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமும், ஆண்டிற்கு இரண்டு பெரிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்களும் நடத்தப்பட்டு வருகிறது.நவம்பர் மாதத்திற்கான சிறியயளவில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 20ம் தேதி விழுப்புரம் வேலைவாய்ப்பு மையத்தில் நடக்கிறது.முகாமில் 20க்கும் மேற்பட்ட தனியார்துறை நிறுவனங்கள் பங்கேற்று, 500க்கும் மேற்பட்ட காலி பணியிடங்களை நிரப்ப உள்ளனர்.விழுப்புரம்மாவட்டத்தைச் சார்ந்த 8ம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு போன்ற கல்வித் தகுதியுடைய வேலை தேடும் இளைஞர்கள் முகாமில் பங்கேற்கலாம்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.