உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  ரயில் பாதை அருகே தடுப்பு வேலி :எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்

 ரயில் பாதை அருகே தடுப்பு வேலி :எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்

மயிலம்: மயிலம் அடுத்த சின்ன நெற்குணம் கிராமத்தில் ரயில்வே பாதை அருகே தடுப்பு வேலி அமைப்பதை எதிர்த்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். திண்டிவனம் அடுத்த சின்னநெற்குணம் கிராமம் வழியாக தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில் பாதை உள்ளது. இந்த வழியாக சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் இருந்து வந்தே பாரத் உள்ளிட்ட பல்வேறு அதிவேக ரயில்கள் செல்கின்றன. இதனால் இப்பகுதியில் ரயில் பாதையை கடக்கும் போது ஏற்படும் விபத்துகளால் உயிரிழப்புகள் ஏற்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு ரயில்வே நிர்வாகம் ரயில் பாதையை யொட்டி தடுப்பு வேலிகளை அமைத்து வருகின்றனர். இதனை எதிர்த்து சின்ன நெற்குணம் கிராம மக்கள் நேற்று காலை 11:00 மணியளவில் ரயில் பாதை ஓரத்தில் தடுப்பு வேலி அமைக்க கூடாது என கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த மயிலம் இன்ஸ்பெக்டர் காமராஜ், ரயில்வே இன்ஸ்பெக்டர் சுனில் குமார், மண்டல துணை தாசில்தார் மலர்விழி ஆகியோர் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பிரச்னை குறித்து வரும் ஜனவரி 20ம் தேதிக்கு பிறகு முடிவு எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ