உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / துாய்மைப் பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகணரங்கள் வழங்கல்

துாய்மைப் பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகணரங்கள் வழங்கல்

திண்டிவனம் : ஒலக்கூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் துாய்மைப் பணியாளர்களுக்கு 18 லட்சம் ரூபாய் மதிப்பிலான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.15வது மத்திய நிதிக்குழு மானியத்தில், ஒலக்கூர் ஒன்றியத்தில் உள்ள 52 கிராமங்களில் பணியாற்றும் துாய்மைப் பணியாளர்களுக்கு 18 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று பிற்பகல் நடந்தது.ஒலக்கூர் ஒன்றிய சேர்மன் சொக்கலிங்கம், துாய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களை வழங்கினார். இதில் ஒன்றிய துணைச் சேர்மன் ராஜாராம், அலுவலக மேலாளர் செந்தில் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ