உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / நலத்திட்ட உதவிகள் வழங்கல்

நலத்திட்ட உதவிகள் வழங்கல்

விழுப்புரம்: சித்தலிங்கமடத்தில் நடந்த முகாமில், முன்னாள் அமைச்சர் பொன்முடி நலத்திட்ட உதவிகள் வழங்கினார். திருக்கோவிலுார் தொகுதி, சித்தலிங்கமடம், பல்லாரிபாளையம் ஆகிய ஊராட்சிகளுக்கான உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் பொன்முடி தலைமை தாங்கி துவக்கி வைத்தார். பின்னர், பயனாளிகளுக்கு உரிய உத்தரவு மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நிகழ்ச்சியில், மாவட்ட ஊராட்சி சேர்மன் ஜெயச்சந்திரன், முன்னாள் எம்.பி., கவுதமசிகாமணி, நகராட்சி சேர்மன் முருகன், ஒன்றிய சேர்மன் ஓம்சிவசக்திவேல், தி.மு.க., ஒன்றிய செயலாளர் விசுவநாதன், நகர செயலாளர் கணேசன், இளைஞர் அணி நிர்மல்ராஜ், விவசாய தொழிலாளர் அணி விஸ்வநாதன், தகவல் தொழில்நுட்ப அணி கிருஷ்ணராஜ், விவசாய அணி சந்துரு, சுற்றுச்சூழல் அணி ஞானம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை