பி.டி.ஓ.,க்கள் பொறுப்பேற்பு
கண்டமங்கலம் : கண்டமங்கலம் பி.டி.ஓ.,க்களாக சண்முகம், வெங்கடசுப்ரமணியன் பொறுப்பேற்றனர்.கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார ஊராட்சி பி.டி.ஓ., வாக பணிபுரிந்து வந்த மணிவண்ணன், வானுார் வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு கிராம ஊராட்சி பி.டி.ஓ.,வாக இடமாற்றம் செய்யப்பட்டார்.அவருக்கு பதிலாக முகையூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கிராம ஊராட்சி பி.டி.ஓ.,வாக பணிபுரிந்து வந்த சண்முகம் கண்டமங்கலம் வட்டார ஊராட்சி பி.டி.ஓ.,வாக பொறுப்பேற்றார்.அதேபோல் கண்டமங்கலம் கிராம ஊராட்சி பி.டி.ஓ.,வாக பணிபுரிந்து வந்த ராஜவேலு இடமாற்றம் செயசெய்யப்பட்டு, விழுப்புரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலக கண்காணிப்பாளராக பொறுப்பேற்றார். அங்கு கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த வெங்கடசுப்ரமணியன் கண்டமங்கலம் கிராம ஊராட்சி பி.டி.ஓ.,வாக பொறுப்பேற்றார்.