மேலும் செய்திகள்
குறைகேட்புக் கூட்டத்தில் 370 மனுக்கள் குவிந்தன
09-Dec-2025
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டியில் பொது வினியோக திட்டத்தில் பொதுமக்கள் குறைகேட்பு முகாம் நடந்தது. தாலுகா அலுவலகத்தில் நடந்த முகாமிற்கு, வட்ட வழங்கல் அலுவலர் ராஜேஷ் தலைமை தாங்கி பொதுமக்களிடமிருந்து புதிய ரேஷன் கார்டு, பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் ,முதியோர் மாற்றுத்திறனாளிகள் அங்கீகார சான்று உள்ளிட்ட மனுக்களை பெற்று பேசுகையில், 'கடந்த 2 மாதங்களாக 75 மனுக்கள் பெறப்பட்டு அதில் 73 மனுக்கள் மீது உடனடி தீர்வு காணப்பட்டது. நிலுவையில் உள்ள 2 மனுக்கள் விசாரணையில் உள்ளது' என்றார். தேர்தல் தனி தாசில்தார் பாரதிதாசன், வருவாய் ஆய்வாளர்கள் தயாநிதி, நாகராஜன், பொறியாளர் சுரேஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். விழுப்புரம்: விழுப்புரம் தாலுகா அலுவலகத்தில் நடந்த முகாமை குடிமைப்பொருள் தனி தாசில்தார் ஆனந்தன் துவக்கி வைத்து, பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றார். வருவாய் ஆய்வாளர்கள் பிரகாஷ், நவீன்குமார் முன்னிலை வகித்தனர். முகாமில், ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், மொபைல்போன் எண் பதிவு, மாற்றம் உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாகவும், பொது வினியோக கடைகளின் செயல்பாடுகள். அத்தியாவசியப் பொருட்களின் தரம் குறித்த புகார்களையும் பொதுமக்கள் மனுவாக கொடுத்தனர்.
09-Dec-2025