உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / வாக்காளர் தின வினாடி வினா போட்டி பங்கேற்க பொதுமக்களுக்கு அழைப்பு

வாக்காளர் தின வினாடி வினா போட்டி பங்கேற்க பொதுமக்களுக்கு அழைப்பு

விழுப்புரம் : தேசிய வாக்காளர் தினத்தை யொட்டி, நடக்கவுள்ள வினாடி வினா போட்டியில் பங்கேற்க விழுப்புரம் மாவட்ட பொதுமக்களுக்கு அழைப்பு விடப்பட்டுள்ளது.தமிழகத்தில் வாக்காளர் கள் தேர்தல் நடைமுறையில் பங்கேற்கும் நோக்கில், 14வது தேசிய வாக்காளர் தினத்தை யொட்டி மாநில அளவில் பொதுமக்களுக்கான வினாடி வினா போட்டி வரும் 21ம் தேதி காலை 11.00 மணி முதல் 11.15 வரை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த போட்டியில் பங்கேற்க https://www.enrolls.tn.gov.in/Quiz2024 என்ற இணையதள முகவரியில் தங்களின் பெயர், விபரங்களை பதிவு செய்யலாம்.இதில் பங்கேற்க விரும்புவோர் தங்களின் விபரங்களை நாளை மற்றும் 19ம் தேதி ஆகிய இரு தினங்கள் மட்டுமே பதிய அனுமதிக்கப்படுகின்றனர்.இதில் கலந்து கொள்ள பங்கேற்பாளரின் மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி கட்டாயமாக உள்ளீடு செய்ய வேண்டும் 'இந்திய தேர்தல்கள்' தலைப்பின் அடிப்படையில் இந்த போட்டி நடக்கிறது.இது பற்றி மேலும் விபரங்கள் பெற https://www.enrolls.tn.gov.in/Quiz2024, State contact Center No 1800-4252-1950 and District Contact Center No 1950 தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை