உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ரயில்வே தொழிற்சங்க நிர்வாகிகள் செயற்குழு

ரயில்வே தொழிற்சங்க நிர்வாகிகள் செயற்குழு

விழுப்புரம் : அகில இந்திய எஸ்.சி., - எஸ்.டி., ரயில்வே தொழிற்சங்கத்தின் விழுப்புரம் கிளை நிர்வாகிகளின் செயற்குழு கூட்டம் நடந்தது. கிளைச் செயலாளர் சண்முகராஜா தலைமை தாங்கினார். உதவி செயலாளர் கவுதமி முன்னிலை வகித்தார். தெற்கு மண்டல அமைப்பு செயலாளர் இருசப்பன் சிறப்புரையாற்றினார்.கூட்டத்தில், ரயில் ஓட்டுநர்களுக்கு பணி நேரத்தை குறைக்க வேண்டும். ரயில்வே தொழிலாளர்கள் ரயிலில் பயணிக்கும் போது நடத்துனரால் அவமதிக்கப்படுவதை கண்டிப்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.பொருளாளர் ராஜ்குமார், தலைவர் பார்த்தசாரதி, துணைத் தலைவர்கள் மணிவண்ணன், மூர்த்தி, உதவி செயலாளர் கவுதம் உட்பட நிர்வாகிகள் பங்கேற்றனர். துணைத் தலைவர் ராமமூர்த்தி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை