உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / அரசியலை கடந்து போராடும் ராமதாஸ்

அரசியலை கடந்து போராடும் ராமதாஸ்

திண்டிவனம்; தமிழக வாழ்வுரிமை கட்சி நிறுவன தலைவர் வேல்முருகனின் சகோதரரும், அக்கட்சியின் மாநில ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவருமான திருமாவளவன், நேற்று தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. நிறுவனர் ராமதாசை சந்தித்து பேசினார்.பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், 'அரசியலைக் கடந்து ராமதாஸ், மாபெரும் தமிழினப்போராளி. சமூக நீதிக்காக சமரசமின்றி போராடி வருகிறார். அரசியலில் பல்வேறு கட்ட பரிணாமத்தில் போராடி வரும் ராமதாசை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். இந்த சந்திப்பில் அரசியல் உள்நோக்கம் இல்லை' என்றார்.ராமதாஸ் - அன்புமணி மோதலுக்கு பிள்ளையார் சுழி போட்டவர், ராமதாசின் மகள் வயிற்று பேரன் முகுந்தன்.கடந்த மாதம் 29ம் தேதி, முகுந்தன் வகித்து வந்த பட்டாளி இளைஞர் சங்கத்தின் மாநில தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில் நேற்று முகுந்தன் தைலாபுரம் தோட்டத்தில் ராமதாசை சந்தித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ