மேலும் செய்திகள்
ரேஷன்கடை விற்பனையாளர் தேர்வு முடிவுகள் வெளியீடு
19-Aug-2025
திண்டிவனம் : திண்டிவனம் அருகே ரேஷன் கடை விற்பனையாளரை காணவில்லை என போலீசில் புகார் செய்யப்பட்டது. திண்டிவனம் அடுத்த புறங்கரை கிராமத்தை சேர்ந்த மாங்காளி மகன் சுப்ரமணியன்,45; மேல்பாக்கம் கூட்டுறவு வங்கியின் கீழ் இயங்கும் சாத்தனுார் ரேஷன் கடையில் விற்பனையாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டதால், கடந்த 27ம் தேதி காலை 7:00 மணியளவில் வீட்டில் இருந்து, திண்டிவனம் மருத்துவமனைக்கு புறப்பட்டு சென்றார். பின்னர், அவர் வீட்டிற்கு திரும்ப வரவில்லை. இது குறித்து அவரது மனைவி சரஸ்வதி கொடுத்த புகாரின் பேரில், ஒலக்கூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
19-Aug-2025