மேலும் செய்திகள்
போலியோ விழிப்புணர்வு ஊர்வலம்
25-Oct-2024
செஞ்சி: செஞ்சியில் உலக போலியோ தினத்தை முன்னிட்டு செஞ்சிக் கோட்டை ரோட்டரி சங்கம், சுகாதாரத்துறை மற்றும் ஆலம்பூண்டி ஸ்ரீரங்கபூபதி நர்சிங் கல்லுாரி சார்பில் போலியோ விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.அரசு மருத்துவமனை வளாகத்தில் துவங்கிய ஊர்வலத்தை ரோட்டரி சங்க தலைவர் காமராஜ் துவக்கி வைத்தார். டாக்டர் ராஜலட்சுமி, செயலாளர் இன்பழகன், பொருளாளர் கோகுலகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர். சத்தியமங்கலம் ஆரம்ப சுகாதர நிலைய சுகாதார ஆய்வாளர் ஏழுமலை வரவேற்றார்.ரோட்டரி மாவட்ட தலைவர் குறிஞ்சிவளவன், முன்னாள் தலைவர்கள் பாஸ்கர், சந்திரசேகர், கருணைவேல். ஜெரால்ட், ராஜகோபால், கார்த்தி, துணைத் தலைவர் குமார், முன்னாள் துணைத் தலைவர் சரவணன், முன்னாள் செயலாளர் பிரேம்குமார், சக்திவேல்.ஊரக வளர்ச்சித்துறை ஓய்வு பெற்ற அலுவலர் அறவாழி, ஸ்ரீரங்க பூபதி நர்சிங் கல்லுாரி முதல்வர் ஜெயலட்சுமி, பேராசிரியர்கள் புவனேஸ்வரி, சுமித்ரா மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்.ஊர்வலம் திண்டிவனம் சாலை, காந்தி பஜார் வழியாக சென்ற ஊர்வலம் பேரூராட்சி அலுவலகம் முன் முடிந்தது. அங்கு சங்க நிர்வாகிகள் விழிப்புணர்வு பிரசாரம் செய்தனர்.
25-Oct-2024