உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / 2வது முறையாக விழுப்புரத்தில் ஓட்டு எண்ணும் மையத்தில் கேமராக்கள் பழுது: இடி மின்னல் காரணமாம்

2வது முறையாக விழுப்புரத்தில் ஓட்டு எண்ணும் மையத்தில் கேமராக்கள் பழுது: இடி மின்னல் காரணமாம்

விழுப்புரம்: நீலகிரி, ஈரோடு, தென்காசியைத் தொடர்ந்து, விழுப்புரத்தில் மீண்டும் ஓட்டுப்பதிவு இயந்திரம் வைக்கப்பட்டு உள்ள அறையில் பொருத்தப்பட்டு இருந்த கேமராக்கள் பழுது ஏற்பட்டது. தமிழகத்தில், லோக்சபா தேர்தல் ஓட்டுகள், 39 மையங்களில் எண்ணப்பட உள்ளன. மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் சீலிடப்பட்டு, அறைக்குள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு பூட்டி சீலிடப்பட்டுள்ளன.ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கட்டடத்தில், மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வேட்பாளர்களின் முகவர்கள் மற்றும் அலுவலர்கள், 24 மணி நேரமும் பாதுகாப்பில் உள்ளனர். அறை உள்ளேயும், வெளியிலும், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, 24 மணி நேரமும் கண்காணிக்கப்படுகிறது. நீலகிரி, ஈரோடு, தென்காசி, விழுப்புரம் என, அடுத்தடுத்து மாவட்டங்களில் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் உள்ள கட்டடத்தில், கண்காணிப்பு கேமராக்கள் செயல் இழந்தது, கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.இந்நிலையில், விழுப்புரம் லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட ஏழு தொகுதிகளின் பதிவான ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் ஓட்டு எண்ணும் மையமான விழுப்புரம் அரசு கலைக் கல்லூரியில் மூன்றடுக்கு பாதுகாப்போடு வைக்கப்பட்டுள்ளது. இங்கு 300 சிசிடிவி கேமராக்கள் கண்காணிப்பு பணிக்காக பொருத்தப்பட்டுள்ளது. காலை இடி மின்னலுடன் பெய்த மழையால் 7.30 மணிக்கு வெளியே பாதுகாப்புக்காக பொருத்தப்பட்டிருந்த ஏழு சிசிடிவி கேமராக்கள் திடீரென பழுதானது. மழை விட்ட பிறகு எட்டு முப்பது மணிக்கு மேல் கேமராக்கள் சரி செய்யப்பட்டு மீண்டும் இயங்கியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Sathyanarayanan Subramanian
மே 08, 2024 22:13

Ccv camera default in the strong room of Vote ballot box may be idea of dravida model kanja arasu


sridhar
மே 08, 2024 19:19

இனிமேல் திமுக வெற்றி பெற்றாலும் சந்தேகம் தான் வரும் மாநில தேர்தல் அதிகாரிகள் எல்லோரும் திமுக வட்ட செயலாளர்கள் தான் சாஹு இன்னும் நூறு வருஷம் இங்கே தான் இருப்பார் வாக்களிப்பது வீண்


M Ramachandran
மே 08, 2024 19:14

அணில் கடிதத்தினால் கரண்ட் கட் சொன்னாவர்களுக்கு இதெல்லாம் சகஜமப்பா


J.V. Iyer
மே 08, 2024 17:21

இப்போது யார் வெற்றிபெறுவார்கள் என்பது உறுதியாகிவிட்டது தமிழக முதல்வருக்கு நன்றி


புதிய வீடியோ