மேலும் செய்திகள்
மயிலம் அரசு பள்ளிகள் நுாறு சதவீத சாதனை
10-May-2025
மயிலம்:மயிலம் ஒன்றியத்தில் 1.64 கோடி ரூபாய் செலவில் குடிநீர், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேற்கொள்ள தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.மயிலம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடந்த ஒன்றியக்குழு கூட்டத்திற்கு, யோகேஸ்வரி மணிமாறன் தலைமை தாங்கினார். பி.டி.ஒ., சிவகுமார், கிராம ஊரக வட்டார வளர்ச்சி அலுவலர் மணிமாறன் முன்னிலை வகித்தார்.கொடிமா, முப்புளி, வீடூர், மயிலம், நெடிமோழியனுார் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு சிமெண்ட் சாலை, குடிநீர், பள்ளி சுற்றுசுவர்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ரூ. 1.64 கோடி மதிப்பில் செய்ய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மயிலம் ஒன்றிய துணைத்தலைவர் புனிதா ராமஜெயம், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கண்ணன், செல்வகுமார், கீதா, பரிதா, உமா, சாந்தகுமார், நிவேதா, கண்ணன், தனலட்சுமி, செல்வம், அஞ்சலாட்சி, கோமதி, கயல்விழி, சரசு, ராஜ்பரத், ஜெயந்தி, ஜமுனாராணி, வசந்தா, கலா, சுந்தரி, பொறியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
10-May-2025