உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  ஓய்வு பெற்ற அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

 ஓய்வு பெற்ற அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

விழுப்புரம்: விழுப்புரத்தில் அரசு ஓய்வு பெற்ற அலுவலர் சங்கம் சார்பில் கோரிக்கை விளக்க கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. விழுப்புரம் நகராட்சி திடலில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட தலைவர் சிவனேசன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் அருணகிரி துவக்கி வைத்து பேசினார். மாவட்ட துணைத் தலைவர் குணசேகரன் வரவேற்றார். வட்ட தலைவர்கள் முத்துக்குமாரசாமி, ஆறுமுகம், மாவட்ட செயலாளர் விவேகானந்தன், பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர். பென்ஷனர் கூட்டமைப்பு மாநில நிர்வாகிகள் துரைக்கண்ணு, சிதம்பரம், மாவட்ட தலைவர் சிவகுருநாதன் உள்ளிட்டோர் வாழ்த்தி பேசினர். சங்க மாநில இணைச்செயலாளர் ரகுபதி கோரிக்கைகளை விளக்கி சிறப்புரையாற்றினார். வட்ட தலைவர்கள் முத்துக்குமாரசாமி, ஆறுமுகம், விவேகானந்தன், பாலகிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில், தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் விதத்தில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கருப்பு பட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் நடந்தது. 70 வயது நிறைவடைந்த ஓய்வூதியர்கள் அனைவருக்கும் 10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம். குடும்ப நல நிதி ஒரு லட்சமாக வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை