உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / சரவணப்பாக்கத்தில் நோய் தொற்று அபாயம்

சரவணப்பாக்கத்தில் நோய் தொற்று அபாயம்

திருவெண்ணெய்நல்லுார் அடுத்த சரவணம்பாக்கம் கூட்ரோடு கடலுார் - சித்துார் பிரதான சாலையில் அமைந்துள்ளது. இங்கு தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் பஸ் ஏறி செல்வதற்காக வந்து செல்கின்றனர். இது மட்டுமில்லாமல் 50க்கும் மேற்பட்ட வணிக வியாபாரிகள் கடை நடத்தி வருகின்றனர். நிலையில் பஸ் நிறுத்தம் அருகாமையில் சிறிதளவு மழை பெய்தாலே தண்ணீர் தேங்கி நிற்பது வாடிக்கையாக உள்ளது. தொடர்ந்து தண்ணீர் நிற்பதால் நாளடைவில் நிறம் மாறி அதில் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு, மலேரியா போன்ற நோய்கள் பரவ வாய்ப்புள்ளது.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நீரை அகற்றி இனிவரும் காலங்களில் அப்பகுதியில் தண்ணீர் தேங்கி நிற்காதவாறு வாய்க்கால் அமைக்க வழிவகை செய்ய வேண்டும் என பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை