உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / குண்டும், குழியுமான சாலை; வாகன ஓட்டிகள் கடும் அவதி

குண்டும், குழியுமான சாலை; வாகன ஓட்டிகள் கடும் அவதி

விழுப்புரம்; விழுப்புரத்தில் குண்டும், குழியுமான சாலையால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் திருகுறிப்பு தொண்டர் நகர் பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இந்த நகர் வழியாக காகுப்பத்திற்கு பிரதான சாலை செல்கிறது. இச்சாலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பாதாள சாக்கடை பணிக்காக பள்ளம் தோண்டப்பட்டது. இந்த பள்ளத்தை மண் கொட்டி மட்டுமே சீரமைத்தனர். தார் சாலை அமைக்கவில்லை. இதனால், சாலையில் மெகா சைஸ் பள்ளங்கள் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி சேறும், சகதியுமாக மாறி போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் காணப்படுகிறது. எனவே, குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை