மேலும் செய்திகள்
ரூ.10 லட்சம் மோசடி எஸ்.பி., அலுவலகத்தில் மனு
15-Aug-2025
விழுப்புரம்; ஏலச்சீட்டு நடத்தி ரூ.50 லட்சம் மோசடி செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி, விழுப்புரம் எஸ்.பி., அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பெண்ணாத்துார் அருகே பூதமங்கலத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் மனைவி வள்ளியம்மாள். இவரும், வேறு சிலரும், விழுப்புரம் எஸ்.பி., அலுவலகத்தில் நேற்று மனு அளித்தனர். அதில் கூறியிருப்ப தாவது: எனது சகோதரி செல்வகுமாரி, விழுப்புரம் மாவட்டம் அவலுார்பேட்டையில் மளிகை நடத்தும் நபரின் நண்பர் ஒருவரிடம், 20 பேரை ஏலச்சீட்டு குழுவில் சேர்த்து மாதந்தோறும் பணம் கட்டினார். பின், என்னையும் அந்த ஏலச்சீட்டில் சேர்த்தார். அவர்களை நம்பி, கடந்த 2013ம் ஆண்டில் இருந்து கடந்தாண்டு வரை ஏலச்சீட்டு கட்டினேன். எனக்கு சேர வேண்டிய ரூ.10 லட்சத்து 55 ஆயிரத்தை அந்த நபர் தராமல் காலம் தாழ்த்தி வந்தார். இந்த நிலையில், ஏலச்சீட்டு நடத்தி வந்த அலுவலகத்தை, பூட்டி விட்டு குடும்பத்தோடு தலைமறைவாகி விட்டார். இதேபோல், செல்வக்குமாரியிடம் ரூ.9 லட்சமும், கிறிஸ்டோபரிடம் ரூ.4.25 லட்சம் உட்பட 30க்கும் மேற்பட்டவர்களிடம், மொத்தம் ரூ.50 லட்சம் வரை அந்த நபர் மோசடி செய்துள்ளார். அவர் மீது உரிய நடவடிக்கை எடுத்து எங்களுக்கு சேர வேண்டிய பணத்தை மீட்டு தர வேண்டும்.
15-Aug-2025