உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / சரஸ்வதி கல்லுாரி மாணவர்கள் மாநில போட்டிக்கு தேர்வு

சரஸ்வதி கல்லுாரி மாணவர்கள் மாநில போட்டிக்கு தேர்வு

திண்டிவனம் : கோனேரிக்குப்பம் சரஸ்வதி கலை அறிவியல் கல்லுாரி மாணவர்கள் ஓட்டப்பந்தயம் போட்டியில் வெற்றி பெற்று மாநில அளவில் விளையாடுவதற்கு தேர்வு பெற்றனர்.விழுப்புரத்தில், மாவட்ட அளவிலான முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் நடந்தது. இதில் திண்டிவனம் அருகே உள்ள சரஸ்வதி கலை அறிவியல் கல்லுாரியின் கணினி அறிவியல் மூன்றாம்ஆண்டு மாணவர் மின்னல்ராஜா, 100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் ஓட்டத்திலும், முதலாம் ஆண்டு தமிழரசன் 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்திலும் முதலிடமும் பிடித்தனர்.வணிகிவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் ஆபி, தமிழ் இலக்கியம் இரண்டாம் ஆண்டு மாணவி இலக்கியா 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் முதலிடமும், முதலாமாண்டு மாணவி நந்தினி 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இரண்டாம் இடமும், 200 மீட்டர் ஓட்ட பந்தயத்தில் மூன்றாம் இடமும் பிடித்தனர். வெற்றி பெற்ற அனைவரும் சென்னையில் மாநில அளவில் நடைபெறும் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களை விளையாட்டுத்துறை ஆசிரியர், கல்லுாரி முதல்வர் வீரமுத்து பாராட்டினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை