பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் சரஸ்வதி பள்ளி மாணவர்கள் சாதனை
விழுப்புரம்: விழுப்புரம் சரஸ்வதி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று மாவட்ட அளவில் சாதனை படைத்துள்ளனர். பத்தம் வகுப்பு பொதுத்தேர்வில் விழுப்புரம் சரஸ்வதி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி பவ்யா 500க்கு 495 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதலிடத்தையும், விழுப்புரம் மாவட்ட அளவில் சிறப்பிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். மாணவி பிரியதர்ஷினி 494 மதிப்பெண் பெற்று 2ம் இடத்தையும், மாணவிகள் அக்ஷயா, குணவதி, மாணவர் தருணேஷ் ஆகியோர் 493 மதிப்பெண் பெற்று 3ம் இடம் பிடித்துள்ளனர். பாட வாரியாக தமிழில் ஒருவரும், ஆங்கிலத்தில் 20 மாணவர்கள், அறிவியலில் 22, சமூக அறிவியலில் 20 பேர் உட்பட மொத்தம் 63 மாணவர்கள் நுாறுக்கு நுாறு மதிப்பெண் பெற்றுள்ளனர்.பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவ, மாணவிகள் மற்றும் அவர்களின் பெற்றோர்களை, பள்ளி சார்பில் சேர்மன் ரவீந்திரன், பொருளாளர் சிதம்பரநாதன், நிர்வாக அறங்காவலர் முத்துசரவணன், அறங்காவலர் முத்தையா, தாளாளர் ராஜசேகரன், முதல்வர் யமுனாராணி உட்பட துணை முதல்வர்கள், ஆசிரியர்கள், ஊழியர்கள் பாராட்டினர்.