உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பொங்கல் விழா கயிறு இழுக்கும் போட்டியில் எஸ்.பி., பங்கேற்பு

பொங்கல் விழா கயிறு இழுக்கும் போட்டியில் எஸ்.பி., பங்கேற்பு

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்ட காவல்துறை சார்பில் பொங்கல் விழா கொண்டா டப்பட்டது.விழுப்புரம், காகுப்பம் ஆயுதப்படை மைதானத் தில் நடந்த விழாவிற்கு, டி.ஐ.ஜி., திஷா மித்தல், எஸ்.பி., தீபக் சிவாச் ஆகியோர் தலைமை தாங்கி, விழாவைத் துவக்கி வைத்தனர். ஏ.டி.எஸ்.பி.,க்கள் கோவிந்தராஜ், ஸ்ரீதரன், ஆயுதப்படை டி.எஸ்.பி., ஜோசப் உட்பட இன்ஸ்பெக்டர்கள், சப் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீ சார் குடும்பத்தோடு பங்கேற்றனர்.விழாவையொட்டி, போலீசார் மற்றும் அவர்களின் குடும்பத்தாருக்கான மியூசிக்கல் சேர், கயிறு இழுத்தல் மற்றும் உறியடி போட்டிகள் நடந்தது. எஸ்.பி., தீபக் சிவாச் கயிறு இழுக்கும் போட்டியில் பங்கேற்று கயிற்றை இழுக்க டி.ஐ.ஜி., போட்டியை துவக்கி வைத்தார். முன்னதாக, போலீசார் மற்றும் அவர்களின் குடும்பத்தாருக்கு படைத்த பொங்கல் வழங்கி எஸ்.பி., வாழ்த்து தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ