உள்ளூர் செய்திகள்

பள்ளி ஆண்டு விழா.

விழுப்புரம், : விழுப்புரம் சரஸ்வதி மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் ஆண்டு விழா நடந்தது.பள்ளி சேர்மன் டாக்டர் ரவீந்திரன் தலைமை தாங்கினார். தாளாளர் ராஜசேகரன் வரவேற்றார். பொருளாளர் சிதம்பரநாதன், நிர்வாக அறங்காவலர் முத்துசரவணன் முன்னிலை வகித்தனர்.கூடுதல் கலெக்டர் ஸ்ருதன் ஜெய்நாராயணன், தனியார் பள்ளிகளின் மாவட்ட கல்வி அலுவலர் சுப்புராயன் சிறப்புரையாற்றினர். தொடர்ந்து மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சியும் மாணவர்களின் திறன்பட்ட சாதனைகளை பாராட்டி பரிசு மற்றும் சான்றிதழும் வழங்கப்பட்டது.விழாவில், நிர்வாகிகள் தமிழரசு, முத்து, பள்ளி முதல்வர் யமுனாராணி, சரஸ்வதி எக்சல் பள்ளி முதல்வர் இந்துமதி, நிர்வாக அலுவலர் முத்து சிவஞானம் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை