மருத்துவக் கல்லுாரியில் அறிவியல் மாநாடு
விக்கிரவாண்டி: விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அறிவியல் மாநாடு நடந்தது. கல்லுாரி டீன் ரமாதேவி தலைமை தாங்கி , வினாடி வினா கருத்தரங்கில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார். துணை முதல்வர் தரணி, மருத்துவ கண்காணிப்பாளர் தரணேந்திரன், ஆர்.எம்.ஓ., ரவிக்குமார், துறை தலைவர்கள் திலகவதி, சங்கீதா, ஜானகி, இணை பேராசிரியர்கள் கணேஷ்குமார், கீதாஞ்சலி, சிவங்கரி, நிர்வாக அதிகாரி சிங்காரம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். பாசில் நன்றி கூறினார்.