உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க அரசு பள்ளி மாணவிகள் தேர்வு

மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க அரசு பள்ளி மாணவிகள் தேர்வு

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டியில், விழுப்புரம் மாவட்ட பள்ளி கல்வித்துறை சார்பில் மாவட்ட அளவிலான பெண்களுக்கான கோ- கோ போட்டியில் 14 வயதிற்குட்பட்ட பிரிவில் வீரபாண்டி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவிகள் பங்கேற்று முதலிடம் பெற்று, தேனி மாவட்டத்தில் நடைபெறவுள்ள மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க தேர்வு பெற்றனர். வெற்றி பெற்ற மாணவிகளை மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் செந்தில்குமார், பள்ளி தலைமை ஆசிரியர் ரவிச்சந்திரன், உதவி தலைமை ஆசிரியர் அய்யனார், பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் நடராஜன், உடற்கல்வி ஆசிரியர்கள் சுபாஷ், விமல்ராஜ் ஆகியோர் மாணவிகளை பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை