| ADDED : பிப் 11, 2024 10:12 PM
மரக்காணம்: கோட்டக்குப்பம் அடுத்த பொம்மையார்பாளையம் ராஜேஸ்வரி மகளிர் கல்லூரியில் செயற்கை நுண்ணறிவு மற்றும் வழிகாட்டுதல் கருத்தரங்கு நடந்தது.கோட்டக்குப்பம் அருகே உள்ள பொம்மையார்பாளையம் ராஜேஸ்வரி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் அனைத்து துறைகளிலும் மனித செயல் மற்றும் தேவைகளிலும் தம்மை தவிர்க்கமுடியாதக் கருவியாக இணைத்துக்கொண்டிருக்கும் நிகழ்வுத் தோழில்நுட்பமான ஆக்கமுறை செயற்கை நுண்ணறிவு என்பது குறித்த கருத்தரங்கு நடந்தது.கருத்தரங்கிற்கு கல்லுாரி செயலர் சிவக்குமார் தலைமை தாங்கினார். முதல்வர் கண்ணன், துணை முதல்வர் பூமாதேவி் முன்னிலை வகித்தனர். பேராசிரியர் ஜெயபிரபா வரவேற்றார்.ஐ.பி.எம்., நிறுவ மூத்த பகுப்பாய்வாளர் அருள்பெஞ்சமின் சத்ரு செயற்கை நுண்ணறிவு வளர்ச்சி, எதிர்கால வாய்ப்புகள் குறித்து மாணவிகளுக்கு கருத்துரை வழங்கினார். எச்.சி.எல்., நிறுவன டெக்னிக்கல் ரெக்ரியூட்டர் பிரிசில்லா எபன் ஐடி நிறுவனங்களின் பணித்தேர்வு முறை, நேர்காணல் குறித்து பேசினார். உதவி பேராசிரியர் ரதிதேவி, முனைவர் சரண்யா உள்பட பலர் கலந்து கொண்டனர். உதவி பேராசிரியர் இலக்கியா நன்றி கூறினார்.